வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

3 அக்டோபர், 2010

அயோத்தியும் அயோக்கியமும்

ிமனிதர்கள் அன்போடும் சந்தோஷத்தோடும் இருப்பதற்காக மட்டுமே மதம் என்ற கருவி உருவாக்கப்பட்டது. ஆனால், மதங்கள் மேட்டிமைத்தனத்தையும் மக்கள் கூட்டங்களுக்கிடையே சொல்லொணாத வேற்றுமைகளையும் உருவாக்கவே இந்நாளில் பயன்படுகின்றன. அறிமுக நிலையில் எனது கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். ஆனால், ஏற்றுக்கொள்ள மறுத்தவை:

எனது முதலாவது கேள்வி....
  • இராமன் என்னும் ஒரு இளவரசன் இருந்தான் என்பதற்கான ஆதாரப்பூர்வமான இலக்கியம் தவிர்த்த வரலாறு உண்டா?
எனது இரண்டாவது கேள்வி....
  • இராமன் கடவுள் ஆனது எப்படி?
மூன்றாவது கேள்விகள்...
  • அவன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் கட்டினானா?
  • அவன் வடக்கே படையெடுத்து வெற்றிகண்ட கடாரம் கொண்டான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் முதலான தமிழக மன்னர்களைப் போலக் கிழக்கே படையெடுத்து பாரதத்தின் தென்னகப் பகுதிகளை போரிட்டு வென்றானா? அதற்கான ஆதாரம் உண்டா? அப்படியே ஒரு மனிதன் வாழ்ந்து மடிந்திருந்தாலும் அவனுக்கும் தமிழகத்துக்குமான உறவு என்னவாக இருந்தது என்பதற்கான சரித்திரப் பூர்வமான ஆதாரம் உண்டா? அவன் எப்படி இந்தியாவுக்கும் இலங்கைக்குமான பாலத்தைக் கட்டினான்?
கடல்கோள்(Tsunami) என்னும் ஆழிப்பேரலைகள் பல முற்காலத்தில் வந்திருக்கின்றன. இப்பொழுது வந்த ஆழிப்பேரலை என்ன செய்து சென்றது என்பதை  நம் கண் முன்னால் கண்டோம். அப்படி ஆழிப்பேரலை வந்த பொழுது ஏற்பட்டதுதான் இப்பொழுது இராமர் பாலமாகக் கற்பிக்கப்படும் மண்மேடு. எத்தனைபேர் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்? இந்தியாவும் இலங்கையும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பகுதியாக இருந்தன. இடையில் கடல் இல்லை. ஆழிப்பேரலையால் கடல் குறுக்கீடு உண்டான பிறகு வந்தவர் நமது புலவர் கம்பர். பொய்யை வாதத்திறமைகளால் உண்மையென்று நிரூபிப்பது போல தன் இலக்கிய ஆளுமையால் இராமர் பாலத்தை உண்மையான பாலமாகக் கருதப்படும் அளவுக்கு அதற்கான அஸ்திவாரத்தை உண்டாக்கிச் சென்றுவிட்டார். நாமும் அதையே நம்பி கடவுள் பக்தி என்ற பெயரால் பலவிதமான அட்டூழிங்களையும் அயோக்கியத்தனங்களையும் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இது வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம்.....!....? அல்ல. இந்து தேசம்; பாரத தேசம். இந்து என்ற சொல்லின் அடியாகப்பிறந்ததுதானே இந்தியா! எப்படி அனைத்து மக்கள் தரப்பினரையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளும்? பாரதியாரின் கூற்றுப்படி இந்து மதத்தினர் அனைவருக்குமான தேசம் கூட அல்ல இத்தேசம். இது ஆரியர்களுக்குச் சொந்தமான தேசம்; 'ஆரிய பூமி'. ஒரு காலத்தில் புத்த விகாரைகளையும் சமணர்களுக்கான இடங்களையும் துவம்சம் செய்து ஹிந்து தர்மத்தை நிலைநாட்டினார்கள். இன்று இவ்வினத்தவர்கள் சிறுபான்மையாக்கப்பட்டார்கள். பிறகு 'பிள்ளையார் கோயிலை இடித்துப் பெருமாள் கோயில்' கட்டினார்கள். இப்பொழுது அரங்கேறியிருப்பது வரலாறு நெடுக வந்த சம்பவங்களைப் போன்ற ஒன்றுதான். அரசாங்கமோ சட்டமோ ஆளும் வர்க்கத்துக்கும் பெரும்பான்மை பலம் கொண்டவர்களுக்கும் அடிபணியும் ஒரு கருவிதானே ஒழிய அது நடுநிலையானதாக எப்பொழுதுமே இருந்ததில்லை/இருப்பதில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டில் இருந்து கொண்டு அதற்குக் குந்தகம் விளைவிக்கும்படியான செயல்பாடுகளை நேரடியாகச் செய்யக்கூடாது. அதனால்தான் பசுத்தோல் போர்த்திய புலியாக கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக ஒரு நாடகம் இங்கே அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

வாழ்க 'ஹிந்துயிஸம்'. வளர்க ஜனநாயகம்!