வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

2 ஏப்ரல், 2011

இந்தியா-இலங்கை உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா வெற்றி!

ஒரு ரன் கூட எடுக்காத நிலையிலேயே மட்டையைக் கையில் பிடித்த உடனேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு ஆளான நம் துக்கத்தை எதைச் சொல்லி ஆற்றுவது? தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கலாமா என்றுகூட வார்த்தைகளில் வெளியிட முடியாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.  உடனடியாக எனது நண்பனுக்கு அழைத்தேன். இது முன்பே முடிவு செய்துவிட்ட ஆட்டம் என்றான். அவனுடைய கூற்றுக்குக் கல்லூரி பேராசிரியரையும்-அவரது வாக்கையும் சாட்சிக்கு அழைத்தான். ஒருவழியாக இறுதியில் இந்தியா வென்று காட்டியது. முன்பே தீர்மானிக்கப்பட்ட ஆட்டம் அல்ல என்பது இறுதியில் இந்திய வீரர்கள் உலகறியச் செய்தார்கள்.

ஆனால், இரண்டு முறை டாஸ் என்ற தடுமாற்றத்துடனே துவங்கிய ஆட்டத்தில்கடைசிவரை ஒரே மாதிரியே பந்துகளுக்கும் எடுக்க வேண்டிய ரன்களுக்குமான எண்ணிக்கை இருந்தது இது முன்கூட்டியே தீர்மானம் செய்து ஆடப்படுகிற ஆட்டமோ என்ற சந்தேகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.

இலங்கைப் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் டென்ஷனானது தெரிந்தது. தோட்டக்காரனுக்குத் தெரியாமல் திருட்டு மாங்காய் அடிக்க, கல்லை வீசுவது போன்றே பாட்ஸ்மேன்களின் கால்களைக் குறி வைத்துப் பந்தை 'எறிந்தார்கள்' வீசுவதற்கு பதிலாக.ஆனால் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அளவுக்கு அழுகுணி ஆட்டம் ஆடாமல் தோற்கப் போகிறோம் என்பதைப் புன்னகையுடனேயே இலங்கை அணியின் கேப்டன் ஏற்றுக் கொண்டது ஒரு கவிதை.

கடைசி ஓவரைத் தான்தான் அடித்து முடிக்க வேண்டுமென்ற தோணியின் பிடிவாதத்தைத் தளர்த்தியிருக்கலாம்.

முன்பே சுலபமாக அடித்து முடிக்க வேண்டிய ஆட்டத்தை மெதுவாக நகரும் மிஷ்கினின் மர்மப்படம் போல மந்த கதியில் கொண்டு சென்று கடைசியில் காத்திருந்த மகாஜனங்களுக்கு போனால் போகிறதென்று ஒரு சிக்ஸரைத் தந்த தோனிக்கும் அரைமில்லிமீட்டர் அளவூக்கு ஒரு சின்ன சிரிப்பைத் தந்து விடுவோம்.

இருபத்தெட்டு வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியிருக்கிறது. இந்தியன் என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது. இந்திய வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிவிடுவோமே.... இந்த நள்ளிரவிலும் பட்டாசு சப்தங்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. நாமும் கொஞ்ச நேரம் வெடித்துவிட்டு இப்பொழுது உறங்குவோம். நாளை கொண்டாடுவோம்.

2 கருத்துகள்:

Sakthivel சொன்னது…

மயிரிழையில் வெற்றி பெற்றதாகத்தான் இந்தியாவின் வெற்றி அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நொடியும் பதற்றமாகவே கழிந்தது இல்லையா? வெற்றி பெற முடியவே முடியாது என்றுதான் முதலில் தோன்றியது. அதை இலங்கை ரசிகர்களின் ஆரவாரக் கூக்குரலும் இந்திய ரசிகர்களின் சோக முகமும் உணர்த்தின. ஆனால், இறுதியில் வெற்றியிலேயே முடிந்தது. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!

ச. நீலமேகன் சொன்னது…

என்னய்யா சக்திவேல் உலகத்துல எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இந்த கிரிக்கெட்டைப்பத்தி நீயும் எழுதி வீணா ஏனய்யா காலத்தை பாழாக்குற ---- ச. நீலமேகன்

கருத்துரையிடுக